கடந்த 26-01-2012 குடியரசு தினத்தை முன்னிட்டு, 39வது வட்ட மருத்துவ சேவை அணி சார்பாக ஸ்டான்லி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சகோ: S.அப்துல் அஜீஸ் தலைமை வகித்தார்.மேலும் A.கலீலுர்ரஹ்மான் (மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர்) & N.மஹபூப்பாஷா (R.K நகர் பகுதி மருத்துவ சேவை அணி செயலாளர்) முன்னிலை வகித்தனர்.
இம்முகாம் செரியன் நகரில் உள்ள த.மு.மு.க அரபி மத்ரஸாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பொதுச்செயலாளர் S.ஹைதர் அலி அவர்கள் திறந்து வைத்தார்.