இஸ்லாமிய கண்காட்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த ஜனவரி 15 (பெண்களுக்கும்) மற்றும் 16 (ஆண்களுக்கும்) தமுமுக செரியன் நகரில் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த ஜனவரி 15 (பெண்களுக்கும்) மற்றும் 16 (ஆண்களுக்கும்) தமுமுக செரியன் நகரில் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது.
இதில் 1800 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகளும் ஏரிய இன்ஸ்பெக்டர் மற்றும் உளவுத்துறை உட்பட அனைவரும் கலந்துகொண்டு இஸ்லாமிய மார்கத்தை பற்றியான தங்களது சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டனர்.
காவல் துறை ஆணையர் மட்டும் தனது 2 மணி நேரத்தை ஆர்வமுடன் இஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொள்வதில் செலவழித்தார்.
இந்த நிகழ்ச்சி மூலம் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களும் மற்றும் ஒரு கல்லூரி மாணவரும்அல்லாஹ்வின் மார்கத்தை ஏற்றுக்கொண்டு கலிமா மொழிந்தனர்.
காவல்துறை ஆணையர் சகோ.சிவமணி அவர்கள் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு இந்நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்த வேண்டும் எனவும் அதற்கு தானே செலவு ஏற்பதாகவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சி எமது உலமா அணி செயலாளர் சகோ . S ரியாசுத்தீன் தலைமையிலும், மதரஸா ஆசிரியர் & மரு.சே.அ செயலாளர் சகோ . S அப்துல் அஜீஸ் பொறுப்புடனும், மேலும் விளக்கங்களை மதரஸா மாணவ மாணவியர்களும் மிகச் சிறப்பாக நடத்தினர்.
அல்லாஹ்வின் மார்க்த்தைப் பரப்புவதற்காக எங்களுக்கு வாய்ப்பளித்த அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்