Tuesday, January 31

த.மு.மு.க முயற்சியால் மதுக்கடை மூடல்

இறைவனின் மாபெரும் கிருபையால் கடந்த பத்து ஆண்டுகளாக செரியன் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள தேசிய நகர்,அஷோக் நகர்,தனபால் நகர், கண்ணுபிள்ளை தெரு , பொன்னுசாமி தெரு, வீர ராகவன் சாலை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக TASMAC மதுக்கடை, த.மு.மு.க வின் முயற்சியால் மூடப்பட்டது.

எங்கள் வட்டத்தின் சார்பாக பல முறை CMDA,JC, மற்றும் பல உயரதிகாரிகளுக்கு கடிதம்,மனு கொடுத்தும் பதில் வரவில்லை. குடிகாரர்களின் அட்டகாசம் பெருகிய நிலையில் த,மு.மு.க வின் அறிவுரையின் பேரில் கடந்த 27-12-2011 அன்று செரியன் நகர் ஊர் நிர்வாக தலைமையில் எல்லா பொதுமக்களும்,பெண்களும்,சிறுவர்களும் T.H. ரோட்டில் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் சுமார் 2 மணி நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பிறகு இணை கமிஷ்னர் வந்து , இனி மதுக்கடை இங்கு வராது என்று வாக்களித்தார்.














அதன் பிறகு மக்கள் கலைந்து சென்றனர்.


செரியன் நகர் - தமுமுக வின் அன்பான வாழ்துக்கள்

த.மு.மு.க மற்றும் ம.ம.க வின் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்க பட்டிருக்கும் அனைத்து நிர்வாகிகளுக்கும் 39 வது வட்ட த.மு.மு.க மாணவர் அணி சார்பாக எங்களின் வாழ்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் முறையே தாம்பரம் மற்றும் மேடவாக்கத்தில் நடைபெற்றது. இதில் மாநில புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜே.எஸ்.ரிபாயி, பொருளாளராக ஒ.யு.ரஹ்மத்துல்லா, த.மு.மு.க. பொதுச் செயலாளராக பி.அப்துல்சமது, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளராக தமீமுன் அன்சாரி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் நிர்வாக குழு மூத்த தலைவர்களாக ஜவாஹிருல்லாஹ் வும், ஹைதர் அலியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Friday, January 27

பாண்டிசேரி - விழுப்புரத்தில் மாணவர்களுக்கான சமுக விழிப்புணர்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்டம்  (வடக்கு)  கோட்டக்குப்பத்தில் 25 /12 /2011ஞாயிற்றுக்கிழமை  த.மு.மு.க நடத்திய மாணவர்களுக்கான சமுக விழிப்புர்வு கூட்டத்தில் அதிகமான மாணவர்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர்.
வட சென்னை மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் சகோ: S.ஜமாலுதீன் த.மு.மு.க வின் வரலாறு மற்றும் சிறப்பு பற்றியும், சகோ.S.அப்துல் அஜீஸ் தொழுகை பற்றியும்,சகோ:A.அப்துல் ரசாக் மூஃமீன்களின் அடையாளங்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.



மற்றும் மாவட்ட நிர்வாகி சலீம் பாஷா சிறப்பு அழைபாளர்களாக கலந்துக்கொண்டு பயான் மற்றும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியை  உள்ளூர் நிர்வாகிகள் முஹம்மத் அலி, சிராஜ், அக்பர், ஹபிப் மற்றும் மாவட்ட நிவாகிகள் முபீன், அஜ்மல் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சி இறுதியில் விழுப்புரம் மாவட்ட தலைவர் முஸ்தாக் தலைமையில்  மாணவர்கள் அனைவரும்







த.மு.மு.க வின் மாணவர் அணியில் இணைத்தார்கள்.